×

லாரி மோதி வாலிபர் காயம் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

செய்யூர்: பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்தாஸ் (37). இவர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது,  சென்னையிலிருந்து எம்சாண்ட் ஏற்றிக்கொண்டு தச்சூர் நோக்கி கனரக லாரி வந்து கொண்டிருந்தது. இதில், நீலமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த பைக் மீது வேகமாக மோதியது. இதில் கமல்தாஸ் சம்பவ இடத்திலேயே  தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனை பார்த்த  அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இதில், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட  நீலமங்கலம் பகுதி வழியாக கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமரசம் செய்ததோடு, அக்கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் இயக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  இதனை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post லாரி மோதி வாலிபர் காயம் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Seiyur ,Kamaldas ,Neelamangalam ,Paunjur ,Kelambakkam ,Dinakaran ,
× RELATED செய்யூர் அருகே பரபரப்பு வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு