×

5 மொழியில் வெளியாகிறது அட்லீ இயக்கும் ஷாருக்கான் படம்

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கு ஜவான் என தலைப்பிட்டுள்ளனர்.ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் பாலிவுட்டுக்கு சென்று முதல்முறையாக இந்தி படம் இயக்குகிறார். இதில் ஷாருக்கான், நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ஜவான் என தலைப்பிட்டுள்ளனர். இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இது குறித்து டிவிட்டரில் அட்லீ கூறும்போது, ‘எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த ஷாருக்கான் சாருக்கு நன்றி. உங்கள் படத்தை இயக்குவது கனவு. அது இப்போது நிறைவேறி வருகிறது’ என தெரிவித்துள்ளார்….

The post 5 மொழியில் வெளியாகிறது அட்லீ இயக்கும் ஷாருக்கான் படம் appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Khan ,Atlee ,Mumbai ,Raja Rani ,Theri ,Mersal ,Bigil ,Dinakaran ,
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு