×

பெரியாண்டாங்கோவில் பிரிவு அருகில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

கரூர் : கரூர் பைபாஸ் சாலை பெரியாண்டாங்கோயில் பிரிவு அருகே பூட்டப்பட்ட நிலையில் உள்ள புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரியாண்டாங்கோயில் பிரிவு அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.தற்போது செடி கொடிகள் வளர்ந்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்த பகுதியின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே, இதனை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதனை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post பெரியாண்டாங்கோவில் பிரிவு அருகில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periandango ,Karur ,Periandangoil ,Dinakaran ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை