×

திருவலத்தில் வரலாற்று சிறப்புமிக்க இரும்பு பாலத்தின் 11 இணைப்பு பகுதிகளில் இறுதி கட்ட சீரமைப்பு பணி

*விரைந்து திறக்க வாகன ஓட்டிகள் கோரிக்கைதிருவலம் :  திருவலம் இரும்பு பாலத்தின் 11 இணைப்பு பகுதிகளில் இறுதிகட்ட சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் பேரூராட்சியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 84 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ‘’ராஜேந்திரா இரும்பு பாலம்’ நினைவு சின்னமாக உள்ளது. இப்பாலம் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலத்தில் உள்ள சாலையில் 12 பாலங்களுக்கு இடையேயான 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் கடந்த மார்ச் 24ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர், நிரந்தரமாக பாலத்தின் விரிசல்களை சீரமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்தம் செய்தனர். பின்னர், கடந்த மாதம் 27ந் தேதி பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு பாலத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதன்பின், பணிகள் விரைந்து செய்ததால் கடந்த மே மாதம் 27ந் தேதி நிறைவடைந்தது. தற்போது இறுதிகட்ட சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே இறுதி கட்ட சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டுக்க கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்வது தவிர்க்கப்படும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருவலத்தில் வரலாற்று சிறப்புமிக்க இரும்பு பாலத்தின் 11 இணைப்பு பகுதிகளில் இறுதி கட்ட சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Thiruvalam ,Tiruvalam Iron Bridge ,Iron Bridge ,
× RELATED ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்