×

10ம் வகுப்பு மாணவனை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை

ஆவடி: ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோணம்பேடு, சோழசேரி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர் கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவியை சோழசேரி மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதை  மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த சிபி அரசன் என்பவரை 20 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு சென்றனர். உடனே சக மாணவர்கள் சிபி அரசனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி ஆவடி காவல்துறையினர் மாணவனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.   …

The post 10ம் வகுப்பு மாணவனை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Arasan ,Soraseri Bhajanai Kovil Street ,Govt ,High School ,Kamaraj Nagar ,
× RELATED இன்ஸ்ெபக்டர்கள் 40 பேர் மாற்றம்