×

பழநியில் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா நேற்று சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில் நடந்தது. தெற்கு மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன்பிறகு கோயிலின் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் சமேத உமாதேவியார் வடக்கு பிரகாரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தங்கக் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அடிவாரம் கொங்கு வேளாளர் அமைப்பு நிர்வாகி மாரிமுத்து, நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகபாண்டியன், வஉசி பேரவை நிர்வாகி சுந்தர்,  கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவனேசன், எஸ்.ஜி.தனசேகர்,  எஸ்.ஜி.பழனிவேல், எஸ்.ஜி.ராகவன்,  எஸ்.என்.செந்தில்குமார், எஸ்.என்.விஜயகுமார், எஸ்.என்.சதீஷ்குமார், எஸ்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். …

The post பழநியில் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா appeared first on Dinakaran.

Tags : Palani ,Thirujnana Sambandhar ,Tirunna ,Sambandar ,Palani Periyanayaki Amman Temple ,Siddhanathan Vibhuti Institute ,Thirunna Sambandar ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை