×

மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிப்பு..

தென்காசி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க கூடிய காலத்தில் குற்றாலத்தில் சீசன் காலமாக இருக்கும். இந்த சீசன் காலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றலா பயணிகள் குற்றலா அருவிகளில் குளிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த சீசன் முன்கூட்டியே தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தென்காசி மற்றும் குற்றால பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் தண்ணீரின் அளவு அதிகமாக காணப்படுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது காரணமாக அருவியில் குளித்துகொண்டு இருக்கும் போது சிறு சிறு கற்கள் விழுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய மூன்று அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. சிறிது நேரத்துக்கு பின் தண்ணீரின் அளவு குறைந்து காணப்பட்டால் பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதிக்கபடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்…

The post மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிப்பு.. appeared first on Dinakaran.

Tags : Kurthala ,Tenkasi ,Tenkasi District ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...