×

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 13 ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவின் போது பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாக்களில் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. பெருமாள் தேரில் அமர்ந்து நகரின் ராஜ வீதிகளில் பவனி வருவது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம்  கொண்டுள்ளது. பழைமையும், பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளும் உடைய இத்திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருமாள் விழா கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்றது, பொதுவாக கோயில்களில் 11 நாள்கள் நடைபெறும் பிரமோற்சவம் , 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் என திருவிழாக்கள் நடைபெறும். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்  வான்மதி, உதவி ஆணையர்  முத்து ரத்னவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். …

The post காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thirutheer Utsavam ,Kanchipuram Devaraja Swamy Temple ,Kanchipuram ,Kanchipuram Arulmiku Devaraja Swami Temple Vaikasith Festival… ,Kanchipuram Devaraja Swami ,Temple ,Thiruther Utsavam ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...