×

மனைவியை கடித்த மலைபாம்பை உயிருடன் பிடித்த கணவர்

திருமயம்: மனைவியை கடித்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அரசு மருத்துவமனைக்கு கணவர் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலதுருவாசகபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன்(37). இவரது மனைவி அழகு(33). இவர் தனது வீடு அருகே நேற்று விறகு அடுக்கி கொண்டிருந்தார். அப்போது விறகுக்குள் இருந்த பாம்பு அழகுவை கடித்தது. இதனால் அழகு அலறியடித்து வந்து வீட்டுக்குள் இருந்த கணவரிடம் தெரிவித்தார்.இதையடுத்து கணவர் பாண்டியன், அந்த பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர் அந்த பாம்பை  சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியுடன் திருமயம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு பாம்பை மருத்துவரிடம் காட்டி மனைவிக்கு, உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருமயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில், அழகுவை கடித்தது மலைப்பாம்பு என தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்….

The post மனைவியை கடித்த மலைபாம்பை உயிருடன் பிடித்த கணவர் appeared first on Dinakaran.

Tags : Pudukkotai District ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி..!!