×

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வேலூரில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி, பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த  வழக்கில், ஒரு சிறார் தவிர, பார்த்திபன், மணிகண்டன், சந்தோஷ்குமார், பரத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, 496 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வேலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றவாளிகள் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் வழக்கை வரும் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்….

The post வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ajar ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...