×

அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டும் கோயில் கட்டுமான பணிக்கு ஐகோர்ட் மதுரைகிளை தடை விதிப்பு

தேனி: ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமான பணிக்கு கும்பாபிஷேகம் நடந்த ஐகோர்ட் மதுரைக்கிளை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீ ரெங்காபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயண் என்பவர் உய்ரநீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார். அரசுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி வருகின்றனர் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். கண்ணன் கோயில் கட்டப்பட்டு வரும் இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமாகும் என்றும் கோயில் கட்டுமானத்துக்கு தடை கோரி மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார். மனுதாரின் கருத்தை பதிவுசெய்து கோயில் கட்டுமான பணி, கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது…

The post அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டும் கோயில் கட்டுமான பணிக்கு ஐகோர்ட் மதுரைகிளை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Theni ,Maduraik High Court ,Kumbabhishekam ,Theni District Sri ,Madurai Court ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்