×

கட்சிக்கு எதிராக, சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

* 23 பேரின் பொறுப்பு பறிப்பு * ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை சென்னை:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டது மற்றும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியும், 23 பேரின் பொறுப்புகளை பறித்தும் ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஓ.ராஜா (தேனி மாவட்ட ஆவின் தலைவர்), முருகேசன்(தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்), வைகை. கருப்புஜி (தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர்), சேதுபதி ஆகியோர் இன்று முதல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், சேரலாதன், ஜி.ஜான் போஸ்கோ, எம்.இளையராஜா, சாந்தி நாகராஜ், பரத், ஆர்.மணிகண்டன், கருப்பையா, எம். பெத்தனசாமி, கே.ஏ.முத்துமணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.இதேபோல், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய, தேனி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தனலட்சுமி, ஆர்.தங்கராஜ், கருப்பசாமி, எம்.முருகன், நவீன்குமார், அருள்மொழி, செல்வலட்சுமி அன்பழகன், கருப்பாணி, சாலைக்கரை முத்தையா(தாமரைக்குளம் பேரூராட்சி 3வது வார்டு அவைத் தலைவர்), தனபால்(தாமரைக்குளம் பேரூராட்சி 3வது வார்டு செயலாளர்), ஜெயராமன் (தாமரைக்குளம் பேரூராட்சி 6வது வார்டு செயலாளர்), பெருமாள்(கெங்குவார்பட்டி பேரூராட்சி 10வது வார்டு செயலாளர்), காதர்(தேவதானப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு செயலாளர்), சரவணன் (தென்கரை பேரூராட்சி 7வது வார்டு செயலாளர்), போகராஜ்(தென்கரை பேரூராட்சி 14வது வார்டு செயலாளர்), கோட்டீஸ்வரன் (எ) முருகன்(பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு செயலாளர்), சின்னக்காளை(மார்க்கையன்கோட்டை பேரூராட்சி 9வது வார்டுசெயலாளர்), ஜெயப்பிரகாஷ் (மார்க்கையன்கோட்டை பேரூராட்சி 12வது வார்டு செயலாளர்), முத்தையா (குச்சனூர் பேரூராட்சி 3வது வார்டு செயலாளர்), சீனிநாயுடு(குச்சனூர் பேரூராட்சி 10வது வார்டு செயலாளர்), ஆர்.விமல்ராஜ் (ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு செயலாளர்), மாயாண்டி (ஆண்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு அவைத் தலைவர்)ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கட்சிக்கு எதிராக, சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : OPS ,O. Raja ,Sasikala ,AIADMK ,Edappadi ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி