×

டெல்லியில் மோசமான வானிலை டிராக்டர் பேரணி நாளை ஒத்திவைப்பு: விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால், இன்று நடக்க இருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 41 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.இதற்கிடையே, டெல்லி எல்லையில் போராட்டம் நடக்கும் குண்ட்லி  மானேசர்  பல்வால் பகுதியில் இன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இப்போராட்டம் மோசமான வானிலை காரணமாக நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி ‘சுவராஜ் அபியான்’ சங்க தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோசமான வானிலை நிலவுவதால் டிராக்டர் பேரணி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். குடியரசு தினமான வரும் 26ம் தேதி டெல்லி நோக்கிய டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில், அரியானாவின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 10 டிராக்டர்கள் பங்கேற்கும். ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒருநபர் இப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்,’’ என்றார்.* டிராக்டர் ஓட்ட பெண்கள் பயிற்சிகுடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்படும் டிராக்டர் பேரணியில் பெண்களும்  டிராக்டர் ஓட்டி வருவார்கள் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், அரியானாவில் ஏராளமான பெண்கள் டிராக்டர் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக எடுத்து வருகின்றனர்….

The post டெல்லியில் மோசமான வானிலை டிராக்டர் பேரணி நாளை ஒத்திவைப்பு: விவசாயிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Bad ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...