×

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை: சடலத்தை சாலையில் வைத்து மறியல்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது சகோதரர் சின்னதுரைக்கு (22) விவசாய பணிக்காக தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடனாக டிராக்டர் வாங்கியுள்ளார். 3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.30 ஆயிரம் செலுத்தி வந்த நிலையில் நிலுவை தொகை 3 தவணைகள் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் விவசாய நிலத்தில் இருந்த சின்னதுரையிடம் வந்து ஏன் கடன் தொகையை செலுத்தவில்லை எனக் கேட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதுரை உடனடியாக தனது விவசாய நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சின்னதுரையை தகாத வார்த்தைகளால் திட்டியதால்தான் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலத்தை எடுத்து வந்து செஞ்சி-சேத்துப்பட்டு சாலை தேவனூர் கூட்டுச்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்ைத தொடர்ந்தனர்….

The post தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை: சடலத்தை சாலையில் வைத்து மறியல் appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Suresh ,Devanur ,Senchi ,Villupuram district ,Chinnadurai ,Dinakaran ,
× RELATED பரோட்டா சாப்பிட்டு தூங்கிய எலக்ட்ரீசியன் திடீர் சாவு