×

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை..!

சென்னை: அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். பேராசிரியர் ஆரோக்கியசமி பால்ராஜ் அவர்கள், கம்பியில்லா தகவல் தொழில் நுட்பத்தில் பல்வேறு முக்கியமான கண்டுபிடிப்புகளை படைத்து, உலகளவில் விருதுகள் பெற்றுள்ளார்.  இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார். இச்சந்திப்பின்போது, பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்கள், தமிழ்நாட்டில் உயர் அளவிலான தொழில்நுட்பத்தை  மேம்படுத்துதல் மற்றும்  அதற்கு ஏதுவான சூழலை  ஏற்படுத்துதல்  குறித்து  ஆலோசனைகள் வழங்கினார். மேலும், உயர் கல்வி, தொழில், திறன்மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து முயற்சிகள் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். …

The post அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை..! appeared first on Dinakaran.

Tags : Arogyasamy Balraj ,Stanford University ,United States Tamil Nadu ,Chief Minister ,M.K. ,Stalin ,Chennai ,Arogyaswamy Balraj ,America, Tamil Nadu ,America ,Tamil Nadu ,
× RELATED அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட்...