×

உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா; வாகன ஓட்டிகள் பீதி

உடுமலை : உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனசரக பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, உடும்பு, பாம்பு, காட்டு மாடு, செந்நாய்கள், காட்டுப்பன்றி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களான சிற்றோடைகள் குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் செடி கொடிகளில் பசுமை இழந்து காய்ந்து கருகி வருகின்றன.இதனால் யானைகள் தங்களது தீவனத் தேவையைப் பூர்த்தி பண்ண முடியாமல் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர துவங்கியுள்ளன. யானைகள் உடுமலை- மூணாறு செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் இருக்கும் பசுமையான முட்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.பகல் முழுவதும் சாலையோரம் உலா வரும் யானைகளை கண்டு இவ் வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். உடுமலை மூணாறு சாலையில் காம வெள்ளம் ஏழுமலையான் கோயில் பிரிவு ஆகிய பகுதிகளில் யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் பயணிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்….

The post உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா; வாகன ஓட்டிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Udumalai-Munaru road ,Udumalai ,Anaimalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி...