×

எம்ஐடியில் 66 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் தங்கி படித்து வரும் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் எம்ஐடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: எம்ஐடியில் சோதனை நடத்தியதில் 66 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 39 பேர் இரண்டு முறை தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள். சொந்த ஊருக்கு செல்லும் மாணவர்கள் செல்லலாம். தேர்வு நடக்கும் போது என்ன நிலைமையோ அதை கருத்தில் கொண்டு அவர்கள் தேர்வு எழுத வரலாம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். …

The post எம்ஐடியில் 66 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,MIT ,Crompettai ,Ponmudi ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...