×

மணிமண்டபங்களை சுற்றுலா பயணிகள் அறிந்திடும் வகையில் 5 கி.மீ.க்குள் வழிகாட்டிப் பலகைகள் அமைத்திட வேண்டும்: அலுவலர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்

சென்னை: செய்தித்துறை அமைச்சர்
சாமிநாதன் தலைமையில், கோயம்புத்தூர் மண்டலத்திற்குட்பட்ட  மாவட்ட செய்தி
மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு,
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களின் செய்தி
மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்து செய்தித்துறை அமைச்சர் விரிவான
ஆய்வு மேற்கொண்டார். அலுவலர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மாவட்ட செய்தி
மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள்,
நினைவகங்கள் ஆகியவற்றை சிறந்த முறையில் பராமரித்திட அரசின் நிதியை
எதிர்நோக்காமல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக சிறு சிறு
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். மாவட்டங்களில்
உள்ள மணிமண்டபங்களை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அறிந்திடும் வகையில்,
சாலையோரங்களில்  வழிகாட்டிப் பலகைகள் 5 கி.மீ.க்குள்ளாக அமைத்திட ஆவன செய்ய
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post மணிமண்டபங்களை சுற்றுலா பயணிகள் அறிந்திடும் வகையில் 5 கி.மீ.க்குள் வழிகாட்டிப் பலகைகள் அமைத்திட வேண்டும்: அலுவலர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Information Minister ,Saminathan ,Chennai ,District Information and Public Relations ,Coimbatore ,Mani Mandapams ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி எல்லைகள்...