×

ரிவால்டோ யானையை மீண்டும் தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை-வனத்துறையினர் தகவல்

ஊட்டி :  ரிவால்டோ யானையை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்ல மீண்டும் முயற்சி மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தும்பிக்கையில் குறைபாடுடன் உலா வரும் ரிவால்டோ என்று அழைக்கப்படும் காட்டு யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த யானையை கடந்த மாத துவக்கத்தில் பழங்களை கொடுத்து கால்நடையாக அழைத்து செல்லப்பட்டது. கல்லஹல்லா வரை சென்ற யானை, வனத்துறையின் கட்டுபாட்டில் இருந்து தப்பித்து மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கே வந்து சேர்ந்தது. இந்த சூழலில் கூடலூர் பகுதியில் உள்ள 3 பேரை கொன்ற யானையை பிடிக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ரிவால்டோ யானைைய முகாமிற்கு கொண்டு முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிவால்டோவை தெப்பக்காடு முகாமிற்கு எப்படி அழைத்து செல்வது என்று வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`ரிவால்டோ யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடக்க வைத்து அழைத்து செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், யானை இருக்கும் பகுதியிலேயே காரல் அமைத்து அதில் அடைத்து பழக்கப்படுத்தப்பட்ட பின்னர் அழைத்து செல்லலாமா? எனவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்யப்பட்டு ரிவால்டோ யானை முகாமிற்கு அழைத்து செல்லப்படும்’ என்றனர். இதனிடையே, பொதுமக்களுக்கு எந்த வித தொந்தரவும் செய்யாமல் உலா வரும் ரிவால்டோ யானையை, முகாமிற்கு கொண்டு செல்வதை கைவிட்டு, வனப்பகுதியிலேயே தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். அதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ரிவால்டோ யானையை மீண்டும் தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை-வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rivaldo ,Bepakkadam Camp ,Rivaldo Elephant ,Bepakkadam ,Mudumalai ,barbakkam ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!!