×

அரிவாளால் வெட்டி ரியல் எஸ்டேட் அதிபரை சுட்டுக்கொன்ற கும்பல்: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை

ஓசூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம். லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக ஓசூர் அருகே ஆனேக்கல் நீதிமன்றத்திற்கு காரில் வந்தார். அங்கு, வேலையை முடித்துக் கொண்டு இரவு 9 மணியளவில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனேக்கல் தாலுகா சந்தாபுரம் சாலை சிவாஜி சர்க்கிள் அருகில் சென்ற போது பைக்கில் 5 பேர் வந்தனர். அவர்கள், திடீரென வழிமறித்து தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான ராஜசேகர ரெட்டி காரில் இருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் கழுத்தில் வெட்டியும் ராஜசேகர ரெட்டியை படுகொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை தொடர்பாக பெங்களூரு ரூரல் எஸ்.பி. வம்சி கிருஷ்ணா மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜசேகரரெட்டி, நிலம் ஒன்றை பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்ததும், அதற்காக கோர்ட்டுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்காக 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடி வருகிறார்கள்….

The post அரிவாளால் வெட்டி ரியல் எஸ்டேட் அதிபரை சுட்டுக்கொன்ற கும்பல்: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Karnataka State ,Bangalore ,B.D.M. Rajasekhara Reddy ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது