×

நாகை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகள் மூலம் ரூ.1.16 கோடி கையாடல்: மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

நாகை:  நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் நிதி நிறுவனத்தில் திருக்குவளை மாவூரை சேர்ந்த சத்தியபிரகாஷ் கிளை மேலாளராக உள்ளார். இங்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஜஸ்வர்யா, செபாஸ்டியன் நகரை சேர்ந்த ராஜ்குமார், திருப்பூண்டி சங்கீதா ஆகியோர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர். கடந்த நவம்பர் 24ம் தேதி இங்கு நடந்த தணிக்கையின் போது, பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்த நகை பாக்கெட்டுகள் மாயமானது தெரிய வந்தது. புகாரின்படி நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2020 ஜூன் 20 முதல் 2021 நவம்பர் வரை கிளை மேலாளர் சத்தியபிரகாஷ் உட்பட 4 பேரும் வாடிக்கையாளர் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்தும் 33 போலியான வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி 1359 கிராம் போலி நகைகளுடன் 39 பாக்கெட்டுகளை வைத்துள்ளது,  உறுதிமொழி ஆபரணத்தில் 39.5 கிராம் எடை நகையை 53 கிராமாக உயர்த்தி அடகு வைத்தும் பாதுகாப்பு அறையில் உள்ள பணப்பெட்டியில் இருந்து ரூ.15 லட்சத்து 76 ஆயிரத்து 65 முறைகேடாக பயன்படுத்தியது என ரூ.1 கோடியே 16 லட்சத்து 38 ஆயிரத்து 80 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிளை மேலாளர் சத்தியபிரகாஷ், சேவை நிர்வாகிகள் ஜஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா ஆகிய 4 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

The post நாகை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகள் மூலம் ரூ.1.16 கோடி கையாடல்: மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sathyaprakash ,Thiruvalla Maoor ,Nagai District, Agri Nagi ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...