×

மக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு-கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

ராமநாதபுரம் :  ராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கலெக்டர் சங்கர் லால் குமாவத், எஸ்பி கார்த்திக் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் அரண்மனை, புதிய பேருந்து நிலைய வளாகம், சந்தை திடல் பகுதிகளில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி, பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுரை வழங்கினர். கலெக்டர் கூறுகையில், அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஜன.9 அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஊரடங்கு கால கட்டத்தில் தமிழக அரசின் அனைத்து வழிகாட்டல் நெறிமுறை முற்றிலும் பின்பற்றப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசிக்கு பின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் இரண்டாம் தவணை தடுப்பூசி உடனே செலுத்தி கொள்ள வேண்டும். அரசு வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், பிஆர்ஓ நவீன் பாண்டியன், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post மக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு-கலெக்டர், எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Corona ,SP ,Ramanathapuram ,Collector ,Shankar Lal Kumawat ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’