×

வணிகவரித்துறையில் 7 கோட்டம் உருவாக்கம்

சென்னை: தமிழக வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கடலூர் கோட்டத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியை வருவாய் மாவட்டத்தை சேர்த்தும், திருவாரூர் கோட்டத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தை சேர்த்தும், ஓசூர் கோட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் வருவாய் மாவட்டத்தை சேர்த்தும், திருப்பூர் கோட்டத்தில் திருப்பூர், விருதுநகர் கோட்டத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தை சேர்த்தும், சென்னை வடக்கு மற்றும் தெற்கு கோட்டத்தை சேர்த்து திருவள்ளூர் கோட்டம் புழல் பகுதியிலும், செங்கல்பட்டு கோட்டம் தாம்பரம் பகுதியிலும் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதே போன்று 9 நுண்ணறிவ கோட்டங்கள் இயங்கி வரும் நிலையில், புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகள் மேலும் வலுவாக்கவும் தணிக்கைகளை அதிகப்படுத்தவும், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஒசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்படுகிறது. …

The post வணிகவரித்துறையில் 7 கோட்டம் உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Department of Commerce ,Jyoti Nirmalasamy ,Cuddalore Fort ,Viluppuram ,Kallakkuchiri Revenue ,Gotam ,
× RELATED நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள்...