×

தமிழக – கேரள எல்லையான ஆரியங்காவில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது: கார், ஜீப் அடித்துச் செல்லப்பட்டன

செங்கோட்டை: தமிழக – கேரள எல்லையான ஆரியங்காவு எடப்பாளையத்தில் பெய்து வரும் மழையால் 3 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உயிர் சேதங்களும்,  பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மதியம் ஆரியங்காவு எடப்பாளையம் பகுதியில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டு,  தண்ணீர் பூமிக்கு அடியில் இருந்து பீறிட்டு நீர் வெளியேறியது. கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மண், கல் போன்றவை வீசி எறியப்பட்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் தடைபட்டது. எடப்பாளையம் ஆறு அறை நான்கு சென்ட் காலனி, ஆஸ்ரயா மூன்று சென்ட் காலனி போன்ற பகுதிகளில் கழுதுருட்டி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால்  பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வீடு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மின்கம்பத்தில் சிக்கி  நின்றது. இதே போல், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டோ, காரும் மீட்கப்பட்டது. …

The post தமிழக – கேரள எல்லையான ஆரியங்காவில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது: கார், ஜீப் அடித்துச் செல்லப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Ariyanga ,Tamil Nadu ,Kerala border ,Chengkotta ,Ariangavu Edapalayam, Tamil Nadu ,Kerala ,Arianka border ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...