×

அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடியபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி

சென்னை: சேத்துப்பட்டு பி.சி.ஹாஸ்டல் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கமல் கிஷோர் (36). தொழிலதிபரான இவர், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹித்தேஜ் (5), அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன், வழக்கமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிறுவர்களுடன் விளையாடுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மாலை அதே குடியிருப்பை சேர்ந்த அபிஷேக் (5) என்ற சிறுவனுடன் ஹித்தேஜ், அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் உள்ள நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக ஹித்தேஜ் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கியுள்ளான். உடன் விளையாடிய சிறுவன் அச்சத்தில் இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹித்தேைஜ காணவில்லை என பெற்றோர் தேடியபோது, நீச்சல் குளத்தில் அவன் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி துடித்தனர். உடனே, மகனை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். …

The post அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடியபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Chetupatu B. RC ,Kamal Kishor ,Hostel Road ,
× RELATED உதவி செய்வதாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள்...