×

அருப்புக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அருப்புக்கோட்டை: பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அருப்புக்கோட்டை வழியாக மதுரை திரும்பினார். அப்போது அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் தனியார் மண்டபத்தில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. திடீரென வாகனத்தை நிறுத்தி, அந்த முகாமை பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒவ்வொருவரிடமும் முதல் தவணை ஊசியா? 2வது தவணையா? என்று கேட்டறிந்தார். கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்த முதல்வர், தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்களிடமும் மக்கள் வரவேற்பு குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்வையிட்டார். வெளியில் வந்த முதல்வருக்கு அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக அருப்புக்கோட்டை சபாஸ்புரத்தில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

The post அருப்புக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Corona ,Vaccine ,Camp ,Arubukkotta ,G.K. Stalin ,Pazumbon Devar Memorial ,Chief President of the ,CM. ,Madurai ,Arapukkota ,Corona Vaccine Camp ,Arapukkotta ,Chief Minister of the ,BC ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...