×

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திருவல்லிக்கேணி பகுதி பெசண்ட் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன்ராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தொண்டர்கள் சூழ பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் களம் காண்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார். எம்எல்ஏ பதவி என்பது நியமனப்பதவி கிடையாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி என உதயநிதி பேட்டியளித்தார். வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும் என கூறினார். தி.மு.க ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் முதலில் கைதானதும் நான்தான் என கூறினார். ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். சிறுபான்மையின மக்களுக்கு அரண் யார் என்பது பொதுமக்களுக்குத் தெரியும் என கூறினார். தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் என தி.மு.க தலைவர் உறுதியளித்துள்ளார். வன்முறையற்ற வகையில், மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தி.மு.க கொடுக்கும் என கூறினார். …

The post சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth Team ,Udayaniti Stalin ,Chapakam-Tiruvallikeni ,Udayaniti Stal ,Cheapakam-Tiruvallikeni ,Thiruvallikeni ,Sepakham-Thiruvallikeni ,Dinakaraan ,
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...