×

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்!: சட்டப் போராட்டங்களை முழுமையாக இயக்க திட்டம்..!!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறன், சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’, சூர்யாவின் ‘வாடிவாசல்’ உள்ளிட்ட திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார். தற்போது தாம் இயக்க இருக்கும் பிற படங்கள் மற்றும் இணையத்தொடர் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். அதில்  பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றையும், மகனின் விடுதலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகள், சட்டப்போராட்டங்களை முழுமையாக படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெற்றிமாறன் குறிப்பிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுவிக்கும் முயற்சியில் 32 ஆண்டுகளாக தனியாளாக ஒரு தாய் போராடும் வலியை திரையில் காட்டியாக வேண்டும் என்கிற முனைப்புடன் வெற்றிமாறன் உள்ளார். அற்புதம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் அந்த நடிகை யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கூடிய விரைவிலேயே அற்புதம்மாள் வாழ்க்கை முறை பற்றிய அறிவிப்பையும் அந்த படத்தில் பேரறிவாளனாகவும், அற்புதம்மாளாகவும் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பதும் அவரை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது….

The post பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்!: சட்டப் போராட்டங்களை முழுமையாக இயக்க திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Vetrimaaran ,Perariwalan ,Yumumammamal ,Chennai ,Yuvammamal ,Rajiv Gandhi ,
× RELATED எல்லாம் படங்களும் அடுத்து அடுத்து வந்துட்டு இருக்கு - Vetrimaaran Speech at Garudan Trailer Launch.