×

நடுரோட்டில் சடலம்; விசாரணையில் திருப்பம் பெண் மீது ஏறியது வேறு வாகனம் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

கோவை: கோவையில் நடுரோட்டில் நசுங்கிய நிலையில் கிடந்த பெண் மீது ஏறியது வேறு வாகனம் என தெரியவந்தது. இந்த வழக்கில் இன்ஸ்ெபக்டர் பணியிடம் மாற்றப்பட்டார். கோவை அவினாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 7ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் நடுரோட்டில் உடல் நசுங்கி இறந்துகிடந்தார்.  பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்ததில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் கார் ஏறிச் சென்றது தெரியவரவே அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் ‘‘எனக்கு முன்னால் சென்ற ஒரு கார் அந்த பெண் மீது ஏறியிருக்கலாம். நான் பின்னால் வந்தபோது அந்த பெண்ணின் ஆடை எனது கார் சக்கரத்தில் சிக்கி இழுத்து வந்துவிட்டது. இதில் என் தவறு எதுவுமில்லை’’ எனக் கூறினார். இதனால், வினோத்குமாரின் காருக்கு முன் கோவை பதிவு எண்ணில் ஒரு கார் சென்றதாக தெரிகிறது. அந்த கார்தான் பெண் மீது மோதியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த காரில் இருந்துதான் பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம். பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து அந்த பெண் மீது ஏறியிருக்கலாம் என கூறப்படுகிறது. காணாமல் போன பெண்களின் முகத்துடன் அவரது முகம் ஒத்துப்போகவில்லை. இதனால் அவர் யார்? என கண்டறிய முடியவில்லை. சம்பவத்தை பார்த்த ஆட்டோ டிரைவர் யார் எனவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே இதுகுறித்து விசாரித்து வந்த பீளமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவிற்கு திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை நகர நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை பதிவு எண் கார் சிக்கினால்தான் இந்த வழக்கின் விவரங்கள் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்….

The post நடுரோட்டில் சடலம்; விசாரணையில் திருப்பம் பெண் மீது ஏறியது வேறு வாகனம் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nadurote ,Govay ,Khova ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...