×

பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி..!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேற்குவங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில்  மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று பவானிபூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 8ம் தேதி முதல் பவானிபூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் பாஜக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். பவானிபூர் தொகுதி தேர்தல் பணிக்கு பொறுப்பாக மேற்கு வங்க பாஜக துணைத்தலைவரும் எம்.பி.யுமான அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்….

The post பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி..! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mamta Panerjee ,Bhavanipur Inter-Elections ,Kolkata ,Chief Minister of State ,Mamta Panerjie ,Western State of Bavanipur Assembly ,Bhavanipur ,Inter-Elections ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...