×

பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் விநியோகம்

ஊட்டி : கூடலூர் அருகே தேவர்சோலையை அடுத்த மூலக்காடு மற்றும் குழி மூலா பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கர் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த 11 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லாததால் ரேஷன் கடைகளில் இருந்து இலவசமாக வழங்கப்படும் அரிசியை கூட வாங்க முடியாமல் வறுைம நிலையில் இருந்து வருகின்றனர்.ரேஷன்கார்டு கோரி விண்ணப்பித்து பல மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் கிடைக்காததால், அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியான ரூ.2 ஆயிரமும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, தகவல் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் கவனத்திற்கு சென்றது. இதனைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டார். மூலக்காடு, குழிமூலா பகுதிகளில் வசிக்கும் அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும் தேவர்சோலை பேரூராட்சி சார்பில் அரிசி மற்றும் பருப்பு, உப்பு, எண்ணைய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….

The post பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Moolakadu ,Kuli Moola ,Devarsolai ,Kudalur ,Dinakaran ,
× RELATED தேவர்சோலை பகுதியில் காயத்துடன்...