×

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து முதல் முறையாக மும்பை சாம்பியன்

பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் மும்பை சிட்டி எப்சி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.ஐஎஸ்எல் தொடரின் 7வது சீசன் இறுதிப் போட்டி கோவா மாநிலம், பதோர்தா நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பகானுடன் மும்பை சிட்டி எப்சி அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியின் 18வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் வில்லியம்ஸ் அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.இதைத் தொடர்ந்து  மும்பை சிட்டி அணி பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், எதிரணி வீரர் டிரி ‘ஓன் கோல்’ அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால், கோல் ஏதும் விழாமல் இறுதிக் கட்டம் நெருங்கியது. ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் மும்பை வீரர் பிபின் சிங் அபாரமாக கோல் அடித்து வெற்றியை வசப்படுத்தினார். மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பாகன் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐஎஸ்எல் கோப்பையை முத்தமிட்டது. கடைசி வரை போராடியும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த ஏடிகே மோகன் பகான் இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. தொடரில் அதிக கோல் அடித்த இகோர் அங்குலோ (கோவா எப்சி, 14 கோல்) தங்க ஷூ விருதை தட்டிச் சென்றார். சிறந்த கோல் கீப்பராக மோகன் பகானின் அரிந்தம் பட்டாச்சார்யா தங்கக் கையுறை விருது பெற்றார்….

The post இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து முதல் முறையாக மும்பை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Indian Super League football ,Pathortha ,Mumbai City ,APC ,ISL Football Series ,ISL ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு