×

நெல்லுக்கு ஆதார விலை உயர்வு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசு நெல் குவின்டால் ஒன்றுக்கு 2000க்கும் குறைவாக நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகையை திமுக அரசு 2500 ஆக உயர்த்தித் தரும். அதைப் போல் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையும் 4000 ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அறிவிப்புகள் விவரம்:* தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும்,சிறைப்பிடிக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் குறித்து திமுக கடுமையான முறையில் தனதுகண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு இலங்கை அரசு இதுவரை உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றினைக் காணவேண்டும் என்று திமுக வலியுறுத்துவதுடன், இரு நாட்டுக் கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்கிட மத்திய அரசைத் திமுக வற்புறுத்தும்.* கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரண்டுமாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.* விசைத்தறிக்கு இரண்டு மாதத்திற்கு 750 யூனிட் ஆக உள்ள இலவச மின்சாரம் 1000 யூனிட்ஆக உயர்த்துவது குறித்துப் பரீசிலிக்கப்படும். இச்சலுகை விசைத்தறிப் பாய் நெசவுத் தொழிலுக்கும்அளிக்கப்படும். விசைத்தறித் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அரசுமுழுமையாக அளிக்கும்.* நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்குத்தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 என்பது 2000 ஆக உயர்த்தித்தரப்படும்.* அனைத்துக் கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசால் வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.* திமுக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் அறிவிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா பட்டுப்பூங்கா மீண்டும் தொடங்கப்பட்டு, 25,000 நெசவாளர்கள் பயன் பெறத்தக்க வகையில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.* ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.* மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாகத் தற்போது வழங்கப்படும் 5 ஆயிரம்என்பது ₹8 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், மழைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ₹5 ஆயிரம் என்பது ₹6 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்….

The post நெல்லுக்கு ஆதார விலை உயர்வு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanjagam ,Chennai ,Government of Djagam ,Kazhagam ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...