×

கண்டெய்னர் லாரியில் வந்த ‘பாரின் சரக்கு’: பில் இல்லாததால் தேர்தல் பிரிவு மடக்கியது

கோவை: கோவை மதுக்கரை பகுதியில் நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதை கிணத்துக்கடவு தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 56.09 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. லாரியில் மதுபாட்டில்கள் தொடர்பான ஆவணங்கள் எதுவுமில்லை. சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் முருகன் (40) என்பவரிடம் தேர்தல் பிரிவினர் விசாரித்தனர். அப்போது அவர், ‘‘கர்நாடகா மாநிலத்தில் மதுபான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த மதுபாட்டில்களை ஏற்றி வருகிறேன். திருவனந்தபுரம் கொண்டு போக சொன்னார்கள். இ வே பில் அனுப்பி விட்டார்கள். என்னிடம் எந்த பில்லும் ஆவணமும் தரவில்லை. கேரள மாநில லிக்கர் ஷாப் விற்பனைக்காக இவற்றை எடுத்து செல்கிறேன்’’ என்றார். ஆவணங்கள் இல்லாத நிலையில் மதுபாட்டில்களுடன் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ‘‘முறையான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் லாரியை விடுவிப்போம், இல்லாவிட்டால் அப்படியே நிறுத்தப்பட்டிருக்கும்’’ என்றனர். மதுபாட்டில்கள் சிக்கிய நிலையில், லாரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும். பாட்டில்களை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என தேர்தல் பிரிவினர் மதுக்கரை போலீசாருக்கு உத்தரவிட்டனர்….

The post கண்டெய்னர் லாரியில் வந்த ‘பாரின் சரக்கு’: பில் இல்லாததால் தேர்தல் பிரிவு மடக்கியது appeared first on Dinakaran.

Tags : Barin ,cargo ,Goa ,Nilampur Bypass Road ,Dinakaraan ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...