×

சட்டமன்ற தேர்தலில் ச.ம.க. போட்டியிடும் 40 தொகுதி பட்டியல்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்துள்ளார். வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம்: துறைமுகம், உத்திரமேரூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர் (தனி), சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம் (தனி), லால்குடி, கடலூர், சிதம்பரம், சீர்காழி (தனி), திருத்துறைப்பூண்டி (தனி), சிவகங்கை, மதுரை தெற்கு, பெரியகுளம் (தனி), ராஜபாளையம், திருச்செந்தூர், விருதுநகர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post சட்டமன்ற தேர்தலில் ச.ம.க. போட்டியிடும் 40 தொகுதி பட்டியல்: சரத்குமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,Sarathkumar ,Chennai ,Samattuwa People's Party ,S.M.K. ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த...