×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஆதரவோடு வீழ்த்துவேன்: இடைப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் பேட்டி

சேலம்: இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஆதரவோடு வீழ்த்துவேன் என திமுக வேட்பாளர் டி.சம்பத்குமார் கூறினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் டி.சம்பத்குமார் (37), களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட சம்பத்குமார், இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் அத்தப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தமிழரசன். தாய் புஷ்பா. எம்சிஏ பட்டதாரியான சம்பத்குமார், விவசாயம் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி எனக்கூறி வருவதால், அவரை எதிர்த்து திமுக சார்பில் விவசாயி களம் இறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:- இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் எளிய தொண்டனான எனக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராகவும், முதல்வராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எந்தவொரு தொழிற்சாலையையும் இடைப்பாடி தொகுதிக்கு கொண்டு வரவில்லை. இங்கு 10 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முன்னேற எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர்தான், எடப்பாடி பழனிசாமி. அடித்தட்டு, மேல்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தாரும்தான் உயர்ந்துள்ளார்கள்.தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். அவரின் பிரசாரம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இருக்கிறது. திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகள் கேட்போம். இந்த முறை இடைப்பாடி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி. மக்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவேன்.  இவ்வாறு சம்பத்குமார் கூறினார். …

The post முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஆதரவோடு வீழ்த்துவேன்: இடைப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Edappadi Palaniswami ,Sampath Kumar ,DMK ,Edappadi ,Salem ,D. Sampathkumar ,Eadpadi ,Sampathkumar ,Eadappadi ,Dinakaran ,
× RELATED முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி