×

ஓரம் போ… ஓரம் போ… காங்கிரஸ் அதிரடி முடிவு

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட், இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு, வரும் 27ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் வரிசையாக இம்மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். இம்முறை இங்கு மம்தாவின் ஆளும் திரிணாமுல்லுக்கும், பாஜ.வுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதுவரையில் காங்கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் இம்மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. இப்போதுதான், 30 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பிரசார குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சோனியாவின் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ‘ஜி 23’ என அழைக்கப்படும் மூத்த அதிருப்தி தலைவர்கள் ஒருவரின் பெயர் கூட, இந்த நட்சத்திர பிரசார  பட்டியலில் இடம் பெறவில்லை. அனைவரும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்….

The post ஓரம் போ… ஓரம் போ… காங்கிரஸ் அதிரடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Oram ,Oram Po ,Congress ,West Bengal ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்