×

வாழ்க்கையில் வெற்றிபெற வெள்ளெருக்கு விநாயகரை வழிபடுங்கள்..!!

தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது. வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை வடிக்க உகந்தது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜை செய்து வணங்குவது ஐதீகம்.ஆனால், அது உண்மையான வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக பிள்ளையாரை வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெள்ளை எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்.சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்தது எருக்கன்செடி இலை. இதன் வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்த வேண்டும். …

The post வாழ்க்கையில் வெற்றிபெற வெள்ளெருக்கு விநாயகரை வழிபடுங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Dana Agarshana ,
× RELATED கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு...