×

நாக சதுர்த்தியன்று தரிசிக்க வேண்டிய நாகநாதர் கோயில்கள்

ஸ்ரீகாளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்.  நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர். சென்னை – குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.பாமணி: மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச் சரம் என்று இத்தலத்தை அழைப்பர். சென்னை – கெருகம்பாக்கம்: சென்னை போரூர்&குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.திருப்பாம்புரம்: கும்பகோணம் மற்றும் மயிலாடு துறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.ஸ்ரீவாஞ்சியம்: கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம். நாகூர்: நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது. கீழப்பெரும்பள்ளம்: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. காஞ்சிபுரம்: பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூசித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகு&கேது பூஜித்ததலமும் ஆகும்.பேரையூர்: புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது. நயினார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார். நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.கும்பகோணம்: நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது. திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.  – நாகலட்சுமி  …

The post நாக சதுர்த்தியன்று தரிசிக்க வேண்டிய நாகநாதர் கோயில்கள் appeared first on Dinakaran.

Tags : Naganadar temples ,Chennai ,Tirapthi ,Raku-Kedu ,Chadurtiya ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!