×

கொடைக்கானல் கலையரங்கம் ஏரியாவில் கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிக்கு அருகில் உள்ளது கலையரங்கம் பகுதி. இங்கு தனியார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஏராளமானவை உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கொடைக்கானல் நகராட்சி சார்பில் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்க்கால் முறையாக அமைக்கப்படாத காரணத்தினால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகம்சுளித்தபடி செல்கின்றனர். மேலும் சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கலையரங்கம் பகுதியில்தான் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் வசதி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் முறையாக வழிந்தோடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலையில் ஓடுவதால் ‘கப்’ தாங்க முடியலஉபகரணம் இல்லை கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் நேற்று வழிந்தோடிய கழிவுநீரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் எந்தவித உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் சுத்தம் செய்தனர். எனவே தூய்மை பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொடைக்கானல் கலையரங்கம் ஏரியாவில் கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kalaiyarangam ,Kodaikanal lake ,Kodaikanal Art Gallery ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை