×

க.பரமத்தி பகுதி கோயில்களில் சிவராத்திரி விழா சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

க.பரமத்தி : க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் பிரசித்தி பெற்ற கோயில்களான புன்னைவனநாதர், பாலசுப்பிரமணிய சுவாமி சித்தர் சமாதி, சடையீஸ்வர சுவாமி, குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந்திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை 8 மணிக்கு முதலாம் காலபூஜை, இரவு 12 மணிக்கு இரண்டாம் காலபூஜை, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் காலபூஜை, அதிகாலை 5 மணிக்கு நான்காம் காலபூஜை நடத்தப்பட்டு சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து அம்பாளுக்கும் ஈஸ்வரனுக்கும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.குளித்தலை: குளித்தலை பெரியபாலம் வண்டிப்பேட்டை தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத நாராயண சுவாமி கோயிலில் மாசி மாத சிவராத்திரி திருவிழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்றுமுன்தினம் மகாசிவராத்திரியை ஒட்டி காலையில் பெரிய பாலம் பரிசல் துறையில் இருந்து காவேரி புனித நீர் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு உற்சவர் வீதி உலா முக்கிய வீதி வழியாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை குளித்தலை பத்மசாலியர் சமூகத்தினர் செய்திருந்தனர்….

The post க.பரமத்தி பகுதி கோயில்களில் சிவராத்திரி விழா சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Shivaratri festival ,K. Paramathi ,Lord Shiva ,Swami ,K. Paramathi Union ,Punnaivanathar ,Balasubramanya ,Siddhar ,Samathi ,Satayeeswara ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்