×

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

பெரம்பலூர் : பெரம்பலூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட தேர் தல் அலுவலரான கலெக் டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்றது.இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கணைகள் தங்களது உடைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயக கடமையாற்றுவோம், எனது ஓட்டு எனது உரிமை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.இந்த மினி மாரத்தான் போட்டி பாலக்கரையிலிருந்து தொடங்கி சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பெரியார் சிலை, காந்திசிலை, பழை பஸ்டாண்டு, அம்பேத்கார் சிலை, மாவட்ட அரசு. அரசு மருத்துவமனை வழியாக சென்று பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சின்னதுரை, நூர்ஜஹான், விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, தடகள பயிற்றுநர் கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Awareness Mini Marathon ,District Cheru ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...