×

தில்லை சித்ரகூடத்து தீபாவளி

கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால், கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த்தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி. பஞ்ச கிருஷ்ண தலத்தில் ஒன்றாக விளங்கக்கூடியதும், இந்திரனால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட கண்ணன், கோவிந்தராஜப் பெருமாளாக எழுந்தருளி இருப்பதுமாகிய சிறப்பு சிதம்பரம் தில்லை சித்ரகூடத்துக்கு உண்டு. இந்தத் திருக்கோயிலில் தீபாவளி உற்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று காலை திருவிளக்குகள் சமர்ப்பிப்பார்கள். புதிய ஆடைகளைப் பெருமாளுக்கு சாத்துவார்கள். அன்று சந்நதியில் மூலவரான பெரியபெருமாள் தொடங்கி, பலிபீடம் வரையில், தாயார், மடப்பள்ளி நாச்சியார் என அனைவருக்கும் திருமஞ்சனம் நடைபெறும். தொகுப்பு: அருள்ஜோதி

The post தில்லை சித்ரகூடத்து தீபாவளி appeared first on Dinakaran.

Tags : Thillai ,Gokula ,Indra ,Krishna ,Govardhana ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...