×

திருப்பங்கள் தரும் ஏழுமலையான் வழிபாடு..!!

வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையெல்லாம் தந்தருளும் ஒப்பற்ற தெய்வம் ஏழுமலையான் வேங்கடாசலாபதி. திருப்பதிக்குச் சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோள் இருந்தாலும் அவர்களின் எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் வேங்கடவன். நினைத்ததையெல்லாம் ஈடேற்றிக் கொடுப்பார் ஏழுமலையான்.திருவேங்கடத்தானை, திருப்பம் தரும் ஏழுமலையானை வணங்குவதற்காக, தரிசிப்பதற்காக, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள், திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்துவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை வணங்கிச் செல்கின்றனர்.ஆனால், முதலில் ஸ்ரீவராக மூர்த்தியைத்தான் வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதாவது, திருப்பதி க்ஷேத்திரத்தில், பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பாகவே வராக மூர்த்தி எழுந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.திருப்பதி திருமலையில் வராகரை முதலில் வணங்கிவிட்டுத்தான் வேங்கடவனைத் தரிசிப்பது பக்தர்களின் வழக்கமாயிற்று என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.திருப்பதி திருத்தலத்துக்குச் சென்று, வராக மூர்த்தியையும் ஏழுமலையானையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தந்திடுவார் ஏழுமலையான்!…

The post திருப்பங்கள் தரும் ஏழுமலையான் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Venkatasalapati ,Tirupati ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மெத்தனால்,...