×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி 5 பேர் காயம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரில் ஆண்டுதோறும் வெள்ளாளக்கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புதூர் கிராமத்தினர் செய்துவந்தனர். மஞ்சுவிரட்டு நடைபெறும் இடத்தில் கேலரி அமைத்தல், மேடை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த மஞ்சுவிரட்டுக்கு வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகம், உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என கூறி கிராமத்தினருக்கு நோட்டீஸ் வழங்கியதாக தெரிகிறது.இதனையடுத்து நேற்று கிராமத்தில் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் சுமார் 11 மணியளவில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் வயல்பகுதிகளில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மஞ்சுவிரட்டை பார்த்தனர்….

The post திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manjuvirat ,Tiruputhur ,Nedumaram Pudur ,
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு