×

வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்

விருத்தாசலம் அருகே முஷ்ணம் திருத் தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம். அத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் முஸ்தாபி சூரணம் எனப்படும் கோரைக்கிழங்கு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பல மூலிகைகளால் தயாரிக்கப்படும் பிரசாதம் நோய்களை நீக்கவல்லது. பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரகமாக நின்ற கோலத்தில் காட்சியளிக் கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், திருமேனி மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தல வராஹர் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அழகிய வடிவில் அருட்காட்சி யளிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜவல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இத்தல தாயாரின் தோழிகளாக சப்த கன்னியர்கள் இத்தலத்தில் அருள்கின்றனர். பூவராக சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன்  நிவாச பெருமாளையும் அடிவாரத்தில் அவர் திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அசுவத்த மரமும், நித்ய புஷ்கரிணியும் அமைந்துள்ளது. மிகவும் முக்கியமான எட்டு சுயம்பு க்ஷேத்திரத்தில் முஷ்ணமும் ஒன்றாகும். அவை ரங்கம், முஷ்ணம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகும்.இக்கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் முஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது. ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்தக் கண்ணீரானது அசுவத்த மரமாக உருவெடுத்தது. இக் கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம்,வேணு தீர்த்தம், மிருத்யுஞ்ஜய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன.திருவிடந்தைசென்னை  – மகாபலிபுரம் அருகே திருவிடவெந்தையில் திருமகளை தன் இடது மடியில் அமர்த்தி அருளும் வராஹ மூர்த்தியைக் காணலாம். இவர் நித்யகல்யாணப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். இத்தலத்தில் யானைத் தந்தத்தால் ஆன தொட்டில் உள்ளது. திருமண வரம் வேண்டி கன்னியரும், காளையரும் இவ்வராஹப் பெருமாள் ஆலயத்தை மலர் மாலையோடு வலம் வந்தால் அவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நிச்சயமாகிறது. அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக அரசுபுரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப்பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.இத்தலத்துக்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியை மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கம் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம்.தினம் ஒரு கல்யாணம் என்பதால் பெருமாளுக்கு (உற்சவர்) நித்ய கல்யாணப் பெருமாள் என்று திருநாமம்; அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்று திருப்பெயர். கோயிலில் தனிச் சந்நதி கொண்டிருக்கும் தாயார் கோமளவல்லித் தாயார் என்ற திருப்பெயருடன் அருள்புரிகிறார். ‘திரு’ வை (லட்சுமியை) தன் இடப்பாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி இத்தலத்தின் பெயர் திருவிடந்தை என்றானது என்கிறார்கள்.கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக அரசுபுரிந்துவந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இத்தலத்துக்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியை மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கம் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம்.தினம் ஒரு கல்யாணம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் என்று திருநாமம்; அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்று திருப்பெயர். கோயிலில் தனிச் சந்நதி கொண்டிருக்கும் தாயார் கோமளவல்லித் தாயார் என்ற திருப்பெயருடன் அருள்புரிகிறார். ‘திரு’ வை (லட்சுமியை) தன் இடப்பாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி இத்தலத்தின் பெயர் திருவிடந்தை என்றானது என்கிறார்கள்.இங்குள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசிமாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு. இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடந்தை. திருவலவெந்தைதன்னால் தினமும் திருவிடவெந்தை வந்து வராஹ மூர்த்தியை தரிசிக்க முடியாமல் வருந்திய பல்லவ மன்னனுக்காக திருமகளை வலது மடியில் அமர்த்தி வராஹர் அருள் வழங்கும் திருவலவெந்தை தலம், மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் அருகே உள்ளது. கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு  என்று இத்தல வராஹர் ஆழ்வார் களால் வணங்கப்பட்டவர். இந்த ஞானப்பிரானைப் பற்றி வரலாறு ஒன்று உண்டு. திருக்கடல்மல்லையில் அரிசேகரன் என்ற அரசன் நாள்தோறும் உச்சிக் காலத்தில் அண்மையிலுள்ள திருவிடவெந்தை’ என்ற திவ்விய தேசம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆதிவராக மூர்த்தியைச் சேவித்து விட்டு ஊருக்கு வந்து திருவாராதனை முடித்த பிறகு உணவு கொள்வது வழக்கம். ஒருநாள் வராகமூர்த்தி இவ்வரசனின் பக்தியை உலகத்தினருக்கு அறிவிக்கத் திருவுள்ளங் கொண்டார். தானே ஒரு கிழ அந்தணர் உருவு கொண்டு பூமிப்பிராட்டியாரை ஒரு பெண்ணாக அழைத்துக்கொண்டு திருக்கடல் மல்லைக்கு எழுந்தருளினார். அப்பொழுதுதான் அரசன் திருவிடவெந்தைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்தணர் அரசன் எதிர்சென்று பசிக்கு உணவு தருமாறு கேட்டார். அரசன் தான் திருவிடவெந்தை சென்று திரும்பி வந்தவுடன் அவருக்கு வேண்டுவன நல்குவதாகக் கூறினான். கிழவரோ அச்சமாதானத்தைக் கேட்பதாக இல்லை. ஆகவே, அரசன் அந்தக் கிழவரை வராகமூர்த்தியாக பாவித்து உபசரித்து திருவாராதனை சமர்ப்பித்தான். உடனே வராகமூர்த்தி அரசனது பக்திக்கு மெச்சி பூமிப்பிராட்டியைத் தனது வலப்புறத்தில் வைத்துக் காட்சி தந்தருளி ஞானோபதேசமும் செய்தார். இந்த நிலையில்தான் திருக்கடல் மல்லையில் எழுந்தருளியுள்ளார். இங்கு எம்பெருமான் தனது வலக்காலை ஆதிசேடன் மீது வைத்துக் கொண்டும் இடத்துடையின் மீது பூமிப்பிராட்டியைத் தாங்கிக் கொண்டுமுள்ளார். இந்தத் திருவல எந்தையைச் சேவித்து மகிழ்கின்றோம். இந்தப் பாசுரத்தைக் கொண்ட பதிகம் முழுவதையும் அவன் சந்நதியிலேயே ஓதி உளங்கரைகின்றோம்.கல்லிடைக்குறிச்சிதிருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகவும் வரப்பிரசாதியாக, ஆதிவராஹர் கோயில்கொண்டருள்கிறார். தாமிரபரணி நதியின் தென்கரையில் மிக அழகிய புண்ணியமான கல்யாணபுரம் என்னும் கல்லிடைக்குறிச்சியில் குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூமியுடன் கூடிய வராக உருவம்கொண்ட ‘லட்சுமிபதி’ ‘‘நமக்கு எல்லா நன்மைகளையும் உண்டு பண்ணட்டும்’’ என்று சங்கரதீட்சிதர் என்ற மகானின் ஸ்லோகம் இக்கோயிலின் பெருமையைக் கூறுகிறது. தாமிரபரணி மகாத்மியத்தில் மிகவும் பெருமையாக இந்த ‘திருக்கரந்தை ஆதிவராகர்’ கோயில் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இந்தப் பெருமாளைப் போற்றி ஓர் அருமையான கீர்த்தனை செய்திருக்கிறார். அந்தக் கீர்த்தனை ‘ஆபோகி’ ராகத்தில் அமைந்திருக்கிறது. குபேரனால் இத்திருக்கோயில் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் விதமாக ‘குபேர பிரதிஷ்டிதம்’ என்றே சொல்கிறார். சிறிய கோபுரத்தின் நுழைவுவாயில் முன் பளபளக்கிறது கருடக் கொடி மரம். அங்குள்ள மணிமண்டபத்தில் உற்சவர் லட்சுமி வராஹர் தம்பதியினர் நீளா தேவி, பூமாதேவி சகிதம் காட்சியளிக்கிறார். அடுத்து கருவறை. வராஹப் பெருமான் மட்டும் பூதேவி சகிதம் இருக்கிறார். பீடத்திலிருந்து சுமார் மூன்றடி உயரமுள்ள விக்ரகம். பிரமாண்டமான ஆகிருதி இல்லை. இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இடது மடியிலே பூமிதேவியை அமர்த்திக் கொண்டிருக்கிறார். இடது கை அவள் இடையைப் பரிவுடன் பற்றிக் கொண்டிருக்கிறது. வலது கை தேவியின் முழங்கால்களை ஆதரவுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது. பூமிதேவியின் திருவடிகளுக்குக் கீழே பத்மமாகிற தாமரை மலர்ந்திருக்கிறது. சுவாமியின் அகலமான மார்பிலே அணிமணிகளும், பூணூலும், ஒரு கையில் சங்கும், ஒரு கையில் சக்கரமும் துலங்குகின்றன. கரிய வராக முகம், தீச்சுடர் போன்ற கண்களும், பொன் முடியும், யாகப் பிரியனான பெருமானின் யாக அங்கங்களாகவே தோன்றுகின்றன. யாகத்திலே மகா பிரியராம் இந்த வராகர். இவரே யாகத்தின் திருவுருதானாம். நான்கு வேதங்களும் இவருடைய சரண கமலங்களாம். யூப தபஸ்விகள் இவருடைய கோரைப் பற்களாம். யக்ஞத்தின் அவிசுகள் கொள்ளும் இடம்தான் இவரது தந்தங்களாம். தானங்களே இவருடைய திருமுகம். ஹோமாக்னியே இவருடைய நாக்கு. தர்ப்பைப் புற்கள் இவருடைய ரோமம். ராப்பகல் செய்யும் சந்திரனும் சூரியனும் இவருடைய திருக்கண்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.காஞ்சிபுரம்காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கருவறை கோஷ்டத்தில் உள்ள கள்வர் பெருமான், ஆதி வராஹர் என்றே வணங்கப்படுகிறார். இந்த சந்நதி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று! தன்னை இகழ்ந்த மகாலட்சுமியை அரூப லட்சுமியாக மாறி காமாட்சி அம்மனின் சந்நதியின் வலது கோஷ்டத்தில் தவமியற்றி காமாட்சியின் குங்குமத்தை அவள் திருமேனியில் பக்தர்கள் தூவ அதனால் செளந்தர்யலட்சுமியாக மாறி காமாட்சியின் வலது கோஷ்டத்தில் அமர்ந்த தன் மனைவியைக் காண வந்த திருமாலே கள்வர் பெருமான் எனும் ஆதிவராஹர்.திருப்பதிதிருமலை (திருப்பதி) ஸ்வாமி புஷ்கரணியில் வராஹமூர்த்தி விசேஷமாக வழிபடப்படுகிறார். னிவாசருக்கு இடம் தந்த மூர்த்தியாதலால் முதல் நிவேதனம் இந்த வராஹருக்கே செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தரிசனம் செய்யுமுன் அலர்மேல்மங்கை தாயாரை தரிசித்து பின் வராஹமூர்த்தியை தரிசித்தபின்னே திருமலையப்பனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.செங்கல்பட்டை அடுத்த திருமலை வையாவூர் தலத்தில் அற்புத வடிவில் லட்சுமி வராஹ மூர்த்தி அருளாட்சிபுரிகிறார்.கேரளம், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராஹ மூர்த்தி திருக்கோயில் கொண்டருள்கிறார்.வடஇந்திய மதுரா நகரில், துவாரகீஷ் ஆலயத்திற்கு அருகில் ஆதிவராஹ மூர்த்திக்குத் தனிக்கோயில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை லால் வராஹர் என்கிறார்கள். இவருக்குச் சற்றுத் தொலைவில், வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேதவராஹ மூர்த்தியும் ஆலயம் கொண்டுள்ளார்.ஜெய்ப்பூர் கேந்த்ரபராவில், கர்டீசன்ஸ் தெருவின் வடக்கு முனையில் யக்ஞவராஹ மூர்த்தியின் ஆலயம் உள்ளது. இத்தலம் காடக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. விஜயநகர பாணியில் அமைந்துள்ள ஆலயம் இது.கேரளம் எர்ணாகுளம் – கொடுங்கல்லூர் பாதையில், வரபுழா எனும் தலத்தில் 450 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தியுடன் வராஹமூர்த்தியும் தரிசனம் தருகிறார்.கேரளம் –  கொச்சினிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சேரை எனும் தலத்தில் அழீக்கல் வராஹ மூர்த்தி திருவருள் புரிகிறார்.கேரளம், இடுக்கி மாவட்டம் பன்னூர் தொடுபுழாவில் வராஹமூர்த்திக்கென தனி ஆலயம் உள்ளது. அழகிய வடிவில் வராஹ மூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.புஷ்கர்புஷ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மன் ஆலயத்தில் வராஹமூர்த்தி தனி சந்நதியில் அருள்கிறார். 1727ம் ஆண்டு ராஜா சுவாமி ஜெய்சிங் எனும் ஜெய்ப்பூர் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியாம் இவர்.விசாகப்பட்டினம்வால்டேரில் உள்ள சிம்மாசனத்தில் லட்சுமிநரசிம்மரும் வராஹ மூர்த்தியும் இணைந்து ஒரே உருவில் அருள்கிறார்கள். ஆண்டு முழுதும் சந்தனக் காப்பிலேயே அருளும் மூர்த்தி இவர்.ஹரியானா ஜின்ட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுயம்பு வராஹர் ஆலயம் உள்ளது. அதனாலேயே அந்த தலம், வராஹ கிராமம் என்றழைக்கப்படுகிறது.மைசூர்மாண்ட்யா மாநிலத்தில் உள்ள கல்லஹள்ளி பூக்கனகரேவில் பூவராஹர் ஆலயம் உள்ளது.மத்தியபிரதேசம்மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுரோஹா ஆலயத்தில் வராஹமூர்த்திகளை தரிசிக்கலாம்.ஒடிசாகேந்த்ரபரா மாவட்டத்தில் உள்ள அவுல் எனும் ஊரில் லட்சுமி வராஹர் கோயில் கொண்டருள்கிறார்.ராஜஸ்தான் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மல் நகரத்தின் மையத்தில் வராஹ் ஷ்யாம் எனும் பெயரில் வராஹ மூர்த்தி அருள்கிறார்.நாகலட்சுமி…

The post வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Darshan of Varaha ,Mushnam Thiruth ,Vrudhachalam ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...