×

துக்கம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர். தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்வது துர்கை ரூபம் என்கிறது புராணம். அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது. துர்கை என்றாலே துக்கத்தையெல்லாம் அழிப்பவள் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடியவள் துர்காதேவி என்று சக்தி வழிபாடு செய்பவர்கள் தெரிவிக்கின்ரனர்….

The post துக்கம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Durga ,Durgai Dur ,Kai Dur ,Durgai ,
× RELATED துர்க்கையின் நவ வடிவங்கள்!