×

பூஜையறையில் அம்மா, அப்பா படத்தை வைத்து வணங்கலாமா?

கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தெய்வம் என்பது நான்காவதாக சொல்லப்பட்டிருந்தாலும் மற்ற மூவரின் மூலமாக நாம் அறிந்துகொள்ளும் தெய்வம் என்பதே மிகவும் உயர்ந்தது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதாவது நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வங்கள் தாயும் தந்தையும்தான் என்கிறார் ஔவையார். ஆனால் அவர்கள் மூலமாக நமக்கு குருவின் அருள் என்பது கிடைக்க வேண்டும். அந்த குருவருள் இருந்தால்தான் இறையருளைப் பெற இயலும் என்பதையும் பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இறந்தவர்களின் படங்களை வைத்து வழிபடுவதை சாஸ்திரம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஒரு ஞாபகத்திற்காக நாம் அவர்களது படங்களை வைத்திருக்கிறோமே தவிர இறந்தவர்களின் படங்களை வைத்து வழிபடும் முறை இந்து மதத்தில் கிடையாது. இந்த ஸ்தூல சரீர ரூபத்தை விட்டு அவர்கள் சூட்சும ரூபத்தினை அடைந்து விடுவதால் படங்களை வைத்து வழிபடுவதால் எந்த நன்மையும் இல்லை. அவர்களின் உருவத்தை நாம் மனதில்தான் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர படமாக வைத்து வழிபடுதல் கூடாது. ஞாபகத்திற்காக வைத்திருக்கும் முன்னோர்களின் படங்களை வீட்டு கூடத்திலோ அல்லது தனியாக உங்கள் அறைகளிலோ வைத்துக் கொள்ளலாமே தவிர பூஜையறையில் வைத்தல் கூடாது.திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா  …

The post பூஜையறையில் அம்மா, அப்பா படத்தை வைத்து வணங்கலாமா? appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED கோயில் சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் தம்பதியினர்!