×

அனுமனை விழுங்கிய முதலை:

சிற்பமும் சிறப்பும்இடம்:  ரங்கநாதர் ஆலயம். ஸ்ரீரங்கம்காலம்:  15ஆம் நூற்றாண்டு, விஜயநகர நாயக்கர் ஆட்சிக்காலம்.இராவணன் மகன் இந்திரஜித்க்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி வீழ்ந்தார்.இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் ‘சஞ்சீவினி’ எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்துகிறார்.  சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார்.அங்கு அனுமனைக்கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைக்கிறார். காலநேமி என்னும் அசுரர்  மாரீசனின் மகன் ஆவார்.அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில் குளித்து விட்டு சஞ்சீவினி செடிகளை பறிக்கச்சொல்கிறார்.அனுமன் ஏரியில் குளிக்கையில், காலநேமி ஏவிய மாய முதலை, அனுமனை விழுங்குகிறது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக்கிழித்துக் கொல்கிறார். அனுமன் கையால் இறந்த முதலை அப்சரசாக மாறி, தான் ஒரு முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றைக் கூறி, காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைக்கிறாள்.காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து, இலட்சுமணனைக் காக்குமாறு அப்சரஸ் அனுமனிடம் கூறுகிறாள்.அனுமனும் காலநேமியைக் கொன்று, சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் குன்றை கொணர்ந்து,  இலங்கை திரும்பி, இலட்சுமணனின் மூர்ச்சையை தெளியவைக்கிறார்.இராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேஷராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.செய்தி: படங்கள்: மது ஜெகதீஷ்…

The post அனுமனை விழுங்கிய முதலை: appeared first on Dinakaran.

Tags : Ranganadar ,Vijayanagara ,Ravanan ,Indirajid ,Lakshamanan ,
× RELATED திருப்புகழில் தெய்வங்கள்