×

பூராடம்

மூல நட்சத்திரத்தைப்போலவே இந்த பூராட நட்சத்திரத்திற்கு ஜோதிட பழமொழி ஒன்று உண்டு. அதாவது ‘பூராடம் நூலாடாது’ என்பார்கள். அதாவது பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று அர்த்தம் வருவதாக அந்த பழமொழியை சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு விஷயமாகும். நூலாடாது எனும் வார்த்தையில் நூல் என்பது புத்தகத்தை குறிக்கும். ஆரம்பத்தில் புத்தகப் படிப்பில் கவனமில்லாது இருப்பார்கள். பிறகு போகப்போக படித்துவிடுவார்கள் என்பதுதான் அந்த ஜோதிடப் பழமொழியின் பொருளாகும். பூராடம் போராடும் என்ற கூற்றுக்கு இணங்க எப்பாடுபட்டேனும் நினைத்ததை நடத்தி விடுவார்கள். பொதுவாகவே தனுசு ராசியில் உள்ளவர்கள் போராடுவதற்கு அஞ்சமாட்டார்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பதால், சுத்தமாக எல்லாமுமே சுத்தமாக இருக்க வேண்டும். ஜூஸை விட ஜூஸ் கடை நன்றாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். பூராடத்திற்கு சுக்கிர தசையில் வாழ்க்கை தொடங்கும். இதை துடுக்குச் சுக்கிரன் என்று சொல்லலாம். குழந்தைப்பருவ சேட்டைகள் அதிகமிருக்கும். நீங்கள் பிறக்கும்போதே தந்தையின் வெற்றிக் கணக்கை துவக்குவீர்கள். உங்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் வேலையைப்பற்றி கவலையே படாதீர்கள். எதில் ஈடுபட்டாலும் வெற்றிதான். அரசியல் ஆசை வலுப்பெறும். மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பீர்கள். யார் இவர் என்று எந்த துறையில் இருந்தாலும் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள வெள்ளியங்குடி எனும் தலத்திற்கு சென்று வாருங்கள். உங்களுடைய ராசியாதிபதி குருவை கோதண்ட குரு என்பார்கள். அப்பேற்பட்ட கோதண்ட குருவுக்கு இணையான ராமன் இத்தலத்தில் அருளாட்சி செய்கிறார். உங்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரனுக்கு அதிபதி சுக்கிராச்சார்யார் இத்தலத்தில்தான் இழந்த கண்ணை பெற்றார். எப்போதுமே குருவும், சுக்கிரனும் எதிரெதிர் கிரகங்கள். ஆனால், இத்தலத்தில் குருவின் அம்சம் கொண்ட ராமனை சுக்கிராச்சார்யார் வணங்கியது என்பது சிறப்பாகும். எதிரெதிர் அம்சங்கள் ஒன்றான ஒரு அமைப்பை இது கொடுக்கிறது. எனவே, இத்தலத்திற்கு செல்லும்போது உங்கள் வாழ்வின் அலைவரிசை நேராகின்றன. பிரச்னைகள் சரியாகின்றன. கும்பகோணம் – அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் என்ற இடத்திலிருந்து செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது….

The post பூராடம் appeared first on Dinakaran.

Tags : Puradam ,
× RELATED ஒன்றிய அரசின் நல் ஆளுமை கிராம ஊராட்சி...